தமிழின விடிவுக்காய் மரணித்தவர்களை டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் நினைவுகூரல்

தமிழின விடிவுக்காய் மரணித்தவர்கள்.
தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள்.
உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள்.
தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.

பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை கரங்கைளை இழந்து நின்றவர்கள்!

முதல் நிகழ்வாக தேசியக் கொடியேற்றல் இடம்பெற்றது வளர்தமிழ் 12 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் கிருந்தாபன் விஜயகுமார் ஏற்றிவைக்க வளர்தமிழ் 12 மாணவன் செல்வன் யதுசன் சிவரூபன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார்.

அதன்பிற்பாடு 21/05/1998 அன்று வாகரை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் திடீரென ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி கப்டன் வீமன் என்று அழைக்கப்படும் புதுவீதி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவமயம் ஜெயகாந்தன் அவர்களின் சகோதரர் சிவமயம் ஜெயமனோகர் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.

முதல் எழுச்சி நிகழ்வாக ஓலம் கேட்டதா பாடலுக்கு நடனம் ஆடினார்கள் அத்விகா கோபிராஜ், லக்ஷ்மி பாலகஜேந்தன், அகழ்யா கவிராஜ், அகத்திய கவிராஜ், அனன்யா சுரேஷ், கபினயா இமயக்கந்தான். எம் தாயக விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்த எம் வீர மறவர்களின் நினைவு கூரும் நாளை மாவீரர் நாளைப் பற்றிய பேச்சை வழங்கினார் ராகவன் ராம்ராஜ்  பின்பு காகங்களே காகங்களே காட்டுக்குப் போறிங்களா என்னும் பாடலை வழங்கினார் ஆதியா திருராஜன். அதன்பிற்பாடு எமது மேதகு தேசியத் தலைவர் எமக்காக வழங்கிய சிந்தனைத்துளிகளில் சிலவற்றைக் வழங்கினார் தர்மினி சசிகலாதன்.

விடுதலைப்போராட்டக்காலத்தில் தோன்றிய  எதிரிகளின் பாசறையைத்தேடிப்போகிறோம். தமிழ் ஈழமண்ணை மீட்டேடுக்க ஓடிப்போகிறோம் என்னும் பாடலுக்கு வயலின்  இசைத்தார்கள் சந்தோஸ் ஜெயசேகரன், லதுஜா சிறிவிந்தன் , அபிரா சுபாஷ்கர்.  அதன்பிற்பாடு இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் என்கின்ற பாடலுக்கு நடனம் ஆடினார்கள் சகானா சுகந்தன், சாதுரி ஜெயசேகரன், சஷ்மிகா சுகந்தன், சக்தி பாலகஜேந்தன், பவீனா ரமேஷ்.

எமக்காக உயிர்நீத்த கல்லறைத் தெய்வங்களை வணங்கும் விதமாக கார்த்திகை நாயகர்களே என்னும் தலைப்பில் கவிதை  வழங்கினார் லக்சிதா ராகவன். பின்பு நெஞ்சை நிமிர்த்தி பாடலை வழங்கினார் வர்ஷன் கஜனேசன். பின்பு மாவீரர் நாளை பற்றிய சிறிய உரையை ஆங்கிலத்தில் வழங்கினார் கேஷியன் கிரிதரன்.

எம்மினத்தின் அடையாளமாகப் பறை இசை உள்ளது. தமிழர் சங்க காலம் தொட்டே பறையை முதன்மைப் படுத்ததி உள்ளனர். அப்படிப்பட்ட பறையை பயன்படுத்தி “எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை” என்னும் பாடலுக்கு எழுச்சி நடனத்தை வழங்கினார்கள் கிஷான் பரந்தாமன், மாதேவி கோபிராஜ், லக்சயன் காண்டீபன், தினுசன் கலாதரன், மனிசா மயூரன், சயந்தவி குமரன், மதுசிகா சுகரனன் , டிலக்சியா சேயோன் , அகழ்யா கவிராஜ், மதுசன் மயூரன்.

இறுதியாக திருத்திகா சுகர்னனின் விழிமடல் மூடி துயில்கின்ற வீரர்களே…. என்கின்ற பாடலுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன

எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் எம்முடன் கூடவே இருக்கும், மாவீர்களின் இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது எமது மக்களின் வரலாற்று சுவடியகவும் பண்பாட்டுக்கு உரியவையாகவும் வளர்ந்து நிற்கும்.