பாடசாலை கீதம்

வாழிய வாழிய டார்ட்போர்ட் தமிழ்ப் பள்ளி
வாழிய வாழியவே
வாழிய வாழியவே ! வாழிய வாழியவே !
வள்ளுவன் காட்டிய நல்லறம் கண்டே
வாழிய வாழியவே.

எம்முயிராம் எங்கள் தாய்மொழி தமிழ்மொழி
செம்மொழி போற்றிடுவோம்
தொன்மை கொண்டோம் நாம் தோன்றிய
தாய்நிலம் நெஞ்சினில் ஏற்றிடுவோம் (வாழிய வாழிய)

அம்மையை அப்பனை ஆசான் தெய்வத்தை
அனுதினம் தொழுதிடுவோம்
எண்ணோடு எழுத்தினைக் கண்ணெனக் கருதியே
விண்வரை உயர்ந்திடுவோம் (வாழிய வாழிய)

மெய்யோடு உள்ளமும் மேன்மையடைந்திட
பயிற்சிகள் செய்திடுவோம்
வெய்யவன் கதிரவன் மேன்மையில் தோல்பட
வியர்த்திட உழைத்திடுவோம் (வாழிய வாழிய)

பண்ணோடு பரதமும் பல்லிசை வாத்தியம்
பல் கலை பயின்றிடுவோம்
அன்பினில் யாவரும் இன்புறப் பண்புடன்
நல்லவைசூ பகிர்ந்திடுவோம் (வாழிய வாழிய)

வாழிய வாழியவே ! வாழிய வாழியவே !
வாழிய வாழியவே ! வாழிய வாழியவே !
வாழிய வாழியவே ! வாழிய வாழியவே !