இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2019

சங்கிலியன் இல்லமும் எல்லாளன் இல்லமும் மோதிக் கொள்ளும் பாடசாலை மட்டத்திலான டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2019 க்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 30ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறும். சிறுவர்களுக்கான போட்டிகள் 29ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பாடசாலையிலும் (Holy Trinity Primary School), மறுநாள் 30 ஆம் திகதி ஜூன் மாதம் ‪#‎Dartford‬ ‪#‎Harriers‬ Athletic Club இல் காலை 10 மணி தொடக்கம் மாலை 8மணி வரை நடைபெறும்.

மாணவர்களின் அணிநடை, தமிழீழத் தேசியக் கொடியெற்றல், போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்படும் அதுமட்டுமல்லாமல் பெற்றோர்கள் பார்வையாளர்களுக்கான கயிறிழுத்தல், 400m ஓட்டம், கைகளை பின்புறம் கட்டியபடி பழம் சாப்பிடுதல் போன்ற போட்டிகளும் இடம்பெறும். மெய்வல்லுனர் போட்டிக்கு நீங்களும் வருகை தந்து மாணவர்ளை உற்சாகப் படுத்தும்படி வேண்டிக்கொள்கின்றோம்.