வருடாந்த விளையாட்டு போட்டி 2024 – PART 2

எங்கள் 8வது ஆண்டு விளையாட்டு போட்டி 2024 ஜூன் 29 அன்று, Erith இல் அமைந்துள்ள மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

வருடாந்த விளையாட்டு போட்டி 2024

எங்கள் 8வது ஆண்டு விளையாட்டு போட்டி 2024 ஜூன் 29 அன்று, Erith இல் அமைந்துள்ள மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடனும், அணி நடையுடனும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சங்கிலியன் எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் என மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் ..

கென்ட் காவல்துறையின் வருகை

இன்றைய தினம் கென்ட் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். காவல்துறையில் செய்யப்படும் பணிகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான பக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அவற்றின் உபயோகத்தையும் விளக்கினார்கள் பின்பு கொண்டு வந்த பொருட்களையும் பார்வையிட அனுமதித்தனர். காவல்துறையினருடன் மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்தனர். மாணவர்களுக்கு காவல்துறை மேலும் ..

15ஆவது முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் பள்ளியில் இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று எங்களது பள்ளியில் நினைவுகூரப்பட்டது அதன்பின்பு மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், முல்லைத்தீவு, யாழ் பல்கலைக்கழகம், திருகோணமலை, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் மேலும் ..

மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 75 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன.

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2024

இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு மேலும் ..

தமிழீழத் தேசிய மாவீரர் வார தொடக்க நிகழ்வு 2023

தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்! மேலும் ..

பொப்பி மலரும், காந்தள் மலரும்

தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி மேலும் ..

பொப்பி மலரும், காந்தள் மலரும் ஒரு நோக்கு…

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூர்ந்து மேலும் ..

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2023

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.இந்த வருடமும் வழமை போல பாடல்களைப் பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள். நவராத்திரி விழாவில் பார்வதியை முதல் 3 நாட்களும், லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 மேலும் ..