வருடாந்த விளையாட்டு போட்டி 2024

எங்கள் 8வது ஆண்டு விளையாட்டு போட்டி 2024 ஜூன் 29 அன்று, Erith இல் அமைந்துள்ள மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடனும், அணி நடையுடனும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சங்கிலியன் எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் என மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் ..

கென்ட் காவல்துறையின் வருகை

இன்றைய தினம் கென்ட் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். காவல்துறையில் செய்யப்படும் பணிகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான பக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அவற்றின் உபயோகத்தையும் விளக்கினார்கள் பின்பு கொண்டு வந்த பொருட்களையும் பார்வையிட அனுமதித்தனர். காவல்துறையினருடன் மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்தனர். மாணவர்களுக்கு காவல்துறை மேலும் ..

15ஆவது முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் பள்ளியில் இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று எங்களது பள்ளியில் நினைவுகூரப்பட்டது அதன்பின்பு மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், முல்லைத்தீவு, யாழ் பல்கலைக்கழகம், திருகோணமலை, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் மேலும் ..

பொப்பி மலரும், காந்தள் மலரும்

தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி மேலும் ..

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2023

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.இந்த வருடமும் வழமை போல பாடல்களைப் பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள். நவராத்திரி விழாவில் பார்வதியை முதல் 3 நாட்களும், லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 மேலும் ..

முதல் சுற்றில் சங்கிலியனை பின்தள்ளி எல்லாளன் அணி முன்னகர்கின்றது

வருடந்தோறும் நடைபெறும் தமிழ்ப்பள்ளி மெய்வல்லுனர் போட்டியில் சங்கிலியன் மற்றும் எல்லாளன் அணிகள் இந்த வருடமும் மீண்டும் மோதிக்கொண்டன. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் போட்டிகள் வழமைபோல சிறுவர்களுடைய நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை நிறைவுக்கு கொண்டு வந்து இருந்தது. சிறார்களுக்கான முயல் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல், நின்று நீளம் பாய்தல், கல்லுப்பை எறிதல், தேசிக்காய் கரண்டி, சாக்கு மேலும் ..

இன்று எங்களது பள்ளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எங்களது பள்ளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் மேலும் ..

தமிழ் நூல்களும் துவிச்சக்கரவண்டியும் வழங்கல்.

கணவர் பிரிந்து சென்ற நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் பெண், கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு வருமானத்தை கொண்டு மூன்று பிள்ளைகளையும் வறுமைக்கு மத்தியில் வளர்த்து வருகின்றார். பாடசாலை சென்று வரக்கூட வீட்டில் துவிச்சக்கர வண்டியின்றி உள்ளது பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து சென்றுவர ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் சுயதொழில் செய்ய மேலும் ..

100 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் இயங்கும் கல்விக்கூடத்தில் பயிலும் 100 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி எங்களது பள்ளியால் இன்று வழங்கி வைக்கப்படடன. அதேநேரம் அவர்களுக்கான காலை நேர சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.

தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்பு விழா – 2023

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 19-02-2023, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது. விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000 இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். தமிழர் கல்வி மேலும் ..