பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2023

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்.இந்த வருடமும் வழமை போல பாடல்களைப் பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள்.

நவராத்திரி விழாவில் பார்வதியை முதல் 3 நாட்களும், லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் வணங்குவார்கள். இன்றைய நிகழ்வு குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட படியால் குறுகிய நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கலை வகுப்பு மாணவர்களின் வயலின் இசை, சங்கீதம் மற்றும் நடனம் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையின் சிறிய பட்டறை இடம்பெற்றது அதனை அடுத்து அனைவருக்கும் மதிய உணவுகள் பரிமாறப்பட்டன அத்துடன் இன்றைய நிகழ்வு முற்று பெற்றது.