சரஸ்வதி பூசை 2014

ஆண்டுதோறும் இடம்பெறும் சரஸ்வதி பூசை வழமைபோல் இவ் ஆண்டும் பாடசாலையில் கொண்டாடப்பட்டது. பிள்ளைகள் தங்களது பாடப்புத்தகங்களை முன்னாலே வைத்தும் கலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் அவர்களின் சலங்கைகள், வயலின், இசைக்கருவி போன்றனவற்றை முன்னாலே வைத்து இறையருள் வேண்டி நின்றார்கள். பின்பு ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதேபோல பரதநாட்டியம் தொடங்கும் மாணவிகள் தங்களது குருவிடம் ஆசிர்வாதம் பெற்று காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டார்கள்.