அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும்.

6ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. வருடா வருடம் பரீட்சை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றும் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை தவிர்க்க எம் வேண்டுதலுக்கமைய எமது பாடசாலையை ஒரு பரீட்சை மையமாக அறிவித்தார்கள். அதற்கமைய பிள்ளைகள் இடங்கள் செல்லாமல் எமது பாடசாலையிலையே எல்லாப் பொதுத்தேர்விலும் பங்குகொள்ளலாம்.

ஜூன் 6 தமிழீழ வரலாற்றில் மறக்கமுடியா நாள், உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் 1950 ஆகஸ்ட் 26 இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது. எமது பாடசாலையிலும் பிள்ளைகள் பரீட்சைக்கு செல்லமுதல் சிவகுமாரன் அண்ணாக்கு நினைவு வணக்கம் செலுத்திவிட்டு சென்றார்கள்

IMG_2362 IMG_2356

IMG_2359IMG_2360 IMG_2361