அனைத்துலகத் தமிழ் மொழித் தேர்வு 2016

4ஆம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை எமது பாடசாலையில் வழமைபோல அனைத்துலகப் பொதுத் தேர்வு கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்டது. எங்களது பாடசாலையுடன் சேர்த்து மேலும் 5 பாடசாலை மாணவர்கள் இங்கு தேர்வெழுதினார்கள். பாடசாலை மாணவர்கள் கறுப்பு வெள்ளை உடையணிந்து வந்து தேர்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையால் தயாரிக்கப்பட்ட தேர்வுப் பரீட்சை மழலையர் நிலை மற்றும் பாலர்நிலை பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டது.