கடந்த 10 வருடங்களில் மாணவர்களின் செயலாற்று புள்ளி விபரங்கள்

பாடசாலை சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், கற்றல் பேறுகளையும் பிள்ளைகளின் கற்றலில் பாடசாலையிலும், வீட்டிலும், குடும்பத்தினர் காட்டும் ஈடுபாடானது, அவர்களின் பாடசாலைத் தரங்கள், மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்காக வருதல், சமூகதிறன்களை வளர்த்தல், பட்டப்படிப்புக்குச் செல்லும் வீதத்தை அதிகரித்தல் அத்துடன் இடை நிலைக் கல்விக்கு அப்பாலும் கல்வியைத் தொடருதல் ஆகியவற்றிற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

பாடசாலையுடன் குடும்பத்தின் ஈடுபாடு எனும் போது தன்னார்வத்துடன் அவர்களாகவே இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அதிகம். அந்த வகையில் பாடசாலையில் இடம்பெறும் கூட்டங்களுக்குச் சமூகமளித்தல், பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டுப்போட்டி, வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் கலைவிழா போன்ற நிகழ்விற்கு பெற்றோர்கள் பங்குகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தல் மற்றுமொரு சான்று.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் பாடசாலையில் பெற்ற புள்ளிகள் பாடசாலையின் வளர்ச்சியை செயல்திறன் மூலம் காட்டி நிற்கின்றது. பாடசாலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் விழாவில் அத்தனை மாணவர்களின் பெயர் பட்டியல் ஒரு நூலாக வெளியிட இருக்கின்றோம் என்பதினை தெரிவிக்கின்றோம்.