வணக்கம், எங்களது பாடசாலை மூலமாக முடிந்தளவு சிறிய சிறிய உதவிகளை தாயக மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றோம். அதில் அடுத்தபடியாக முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இந்த சிறுமி யாழ். பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்க்கான முழு சிலவையும் பொறுப்பேற்று அதன் முதற்கட்டமாக கற்றல் தேவைக்கான உபகரணங்கள் வேண்டுவதற்காக சிறு தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளுது. அவர் படித்து முடிக்கும் வரை 3 வருட சிலவினையும் எங்களது பாடசாலை பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் பாடசாலையின் சுமையை சிறிதளவேனும் குறைப்பதற்கா சில பெற்றோர்கள் மாதம் £2 தருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.