வருடாந்த விளையாட்டு போட்டி 2024

எங்கள் 8வது ஆண்டு விளையாட்டு போட்டி 2024 ஜூன் 29 அன்று, Erith இல் அமைந்துள்ள மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடனும், அணி நடையுடனும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சங்கிலியன் எல்லாளன் மற்றும் பண்டாரவன்னியன் என மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு விளையாடினார்கள்.

உடல் உறுதி, குழு மற்றும் தனிநபர் ஆரோக்கியமான போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு விளையாட்டுகள் கொண்ட இந்த நிகழ்ச்சி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளாக 50மீ, 75மீ, 100மீ மற்றும் 400மீ போன்ற வெவ்வேறு வயது குழுக்களுக்கு ஏற்ப ஒட்டப்பந்தயங்கள். தடை தாண்டுதல், நீர் நிரப்புதல் மற்றும் தகர குவளைகளை அடுக்குதல் போன்ற சவால் நிறைந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இறுதியில் சங்கிலியன் இல்லம் வெற்றி வாகை சூட, பண்டாரவன்னியன் இரண்டாம் இடத்தை தக்கவைக்க எல்லாளன் இல்லம் மூன்றாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டது.

We are delighted to announce that the 8th Annual Sports Day held on June 29, 2024, at the Erith Leisure Centre, located at Avenue Road, Erith, DA8 3AT. This highly anticipated event featured a wide range of athletic activities designed to promote physical fitness, team spirit, and healthy competition among participants of all ages.

Key Events:

  • Track Events: Various races including 50m, 75m, 100m, and 400m for different age groups.
  • Field Events: Activities such as skipping races, hurdles, relay races, and unique challenges like the water filling and tin tower building competitions.
  • Fun Races: Engaging events like the rabbit race, fruit race, and frog race for younger participants.

Participants competed in different categories, with events tailored to specific age groups to ensure a fun and fair competition for all.