15ஆவது முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் பள்ளியில் இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று எங்களது பள்ளியில் நினைவுகூரப்பட்டது அதன்பின்பு மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், முல்லைத்தீவு, யாழ் பல்கலைக்கழகம், திருகோணமலை, கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு நாமும் இத் தருணத்தில் புலத்தில் வாழும் அனைத்து உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.