கற்கை நெறி

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் சிறார்களுக்காக தமிழ்ப் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்துலக மற்றும் அரையாண்டு வினாத்தாள்களை மாணவர்களின் நலன் கருதி எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம்.

வளர்தமிழ் 1-12 வகுப்பிற்கான வினாத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் தயாரிக்கப்பட்டு அவர்களாலேயே தேர்வும் நடாத்தப்பட்டு மாணவர்களின் மதிப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. மழலையர் நிலை மற்றும் பாலர்நிலைக்கான வினாத்தாள்கள் எங்கள் பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு பாடசாலை நேரத்தில் அவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

அனைத்துலக பொதுத்தேர்வு வினாத்தாள்களை பெற

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களை பெற

பாலர்நிலை வினாத்தாள்களை பெற

மழலையர் நிலை வினாத்தாள்களை பெற

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல், எழுத்துக்களை எழுதி பழகுதல் போன்ற பல கற்றல் உதவிகளை இணைய வழி மூலம் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். மேலதிகமாக ஆசிரியர்கள் உருவாக்கும் வினாத்தாள்களை இங்கு பகிர்ந்து கொண்டு இருப்போம் என்பதினை தெரியப் படுத்துகின்றோம்.