COVID19 – தாயக மக்களுக்கான உதவிகள்

உலகமெங்கும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். மக்கள் வீடுகளில் முடங்கியபடி வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. பலர் தினமும் அன்றாட வேலைக்கு செல்லும் பாமர மக்கள் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள்.

தமிழர் தாயகத்தில் எம் மக்களும் மற்றவர்களைப் போல உதவிகள் அற்ற நிலையில் இருக்கின்றார்கள். மேற்குலகத்தில் அரசாங்கம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றது அதேபோல சிங்கள பேரினவாத அரசு சிங்கள மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தும் வழமை போல தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எங்கெல்லாம் எம் மக்களை அல்லல் பட வைக்கலாமோ அங்கெல்லாம் சிங்கள பேரினவாதம் தனது வேலைகளை செய்யத் தவறியதில்லை.

அதற்கு சான்றாக எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறையை சிங்கள அரசாங்கம் கையாண்டுள்ளது, அதாவது போர்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரையம் தளபதிகளையும் இந்த நேரத்தில் பொறுப்பாளர்களாக தாயக பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. எமது அன்பார்ந்த மக்களே நாம் எப்பொழுதும் எங்கள் சொந்த இனத்தின் தோழமையிலையே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்துள்ளோம் அதேபோல இந்த இடரிலும் எம் மக்களை நாங்கள் கைவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டுள்ளோம்.

எங்களது பாடசாலை மூலமாக எம்மால் சேர்க்கப்பட்ட 340 000/= ரூபாயை தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உதவியுடன் வட கிழக்கில் எங்களது உதவிகளை செய்துள்ளோம். இதற்கு பங்களித்த பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

« of 2 »