பாடசாலை சென்று வரக்கூட வீட்டில் துவிச்சக்கர வண்டியின்றி உள்ளது பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்து சென்றுவர ஒரு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் சுயதொழில் செய்ய தையல் இயந்திரம் ஒன்றையும் பெற்று தருமாறு கோரியுள்ளனர்.
பிள்ளைகள் கல்வி பயிலுவதற்காக அவர்களின் இல்லத்திற்கு ஒரு துவிச்சக்கரவண்டி எமது பாடசாலை மூலமாக வேண்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குடுமபத்தில் அனைவரும் படித்து முடித்தவுடன் அந்த துவிச்சக்கரவண்டியினை வேறு பிள்ளைகள் பயன்படுத்த குடுக்குமாறு அவர்கள் கல்வி பயிலும் பள்ளியால் ஒழுங்குசெய்யப்படுள்ளது.
அதேபோல ஆண்டு 12 மாணவர்கள் கல்வி கற்பதற்கு எந்த ஒரு தமிழ் நூலும் இல்லாதபடியால் தேர்வுக்கு படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக அந்த வகுப்பிற்கு 10 தமிழ்ப் பாட நூல்களும் எங்களது பள்ளியால் வேண்டி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு முடிந்த பிறகு மாணவர்கள் அந்த நூல்களை பள்ளியில் கல்வி கற்கும் ஏனையவர்கள் பயன்படுத்தமுகமாக அங்குள்ள நூலகத்தில் வைத்துவிட்டு செல்லுமுகமாக ஒழுங்குசெய்யப்படுள்ளது.