முதல் சுற்றில் சங்கிலியனை பின்தள்ளி எல்லாளன் அணி முன்னகர்கின்றது

வருடந்தோறும் நடைபெறும் தமிழ்ப்பள்ளி மெய்வல்லுனர் போட்டியில் சங்கிலியன் மற்றும் எல்லாளன் அணிகள் இந்த வருடமும் மீண்டும் மோதிக்கொண்டன. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் போட்டிகள் வழமைபோல சிறுவர்களுடைய நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை நிறைவுக்கு கொண்டு வந்து இருந்தது.

சிறார்களுக்கான முயல் பாய்ச்சல், தவளைப் பாய்ச்சல், நின்று நீளம் பாய்தல், கல்லுப்பை எறிதல், தேசிக்காய் கரண்டி, சாக்கு ஓட்டம் என பல போட்டிகள் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றிக்கேடயத்தை பிடித்த சங்கிலியன் அணி இந்த வருடம் சற்று பின் தங்கிய நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்து நிற்கின்றது.

அடுத்த வாரம் முக்கிய ஓட்டங்களும், அணிநடை மற்றும் வினோத உடைப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றது. தொடர்ச்சியாக நிலவநடக்கும் அதேநேரம் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி நிகழ்வினை நிறைவு செய்துள்ள்ளார்கள். வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் எல்லாளன் அணியினை சங்கிலியன் அணி பின்தள்ளி முன்னகருமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.